உலக செய்திகள்

சிரியாவில் தப்பியோட முயன்ற 400 ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்நாட்டு படையால் சிறை பிடிப்பு

சிரியாவில் தப்பியோட முயன்ற 400 ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்நாட்டு படையால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர்.

சிரியாவில் அரசு படையினருக்கும் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2011ம் ஆண்டு மோதல் எழுந்தது. இதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இதில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளும் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உள்ளனர். அந்நாட்டின் பாகவுஜ் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றுகையிட்டுள்ளனர். அவர்களின் கட்டுக்குள் இருக்கும் கடைசி பகுதி இதுவாகும்.

சமீப வாரங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து தப்பியோடி வருகின்றனர். இந்த நிலையில், கிராம பகுதியில் இருந்து தப்பியோட முயன்ற 400 ஐ.எஸ். தீவிரவாதிகளை சிரிய ஜனநாயக படையினர் சிறை பிடித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...