டமாஸ்கஸ்,
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த பயங்கரவாத குழுக்களை வேட்டையாடுவதற்கு ரஷியா விமானப்படையுடன் சேர்ந்து சிரியா நாட்டின் முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.
இந்நிலையில், டெய்ர் அல்-சோர் மாகாணத்தில் உள்ள மயாதின் நகரில் சிரியா மற்றும் ரஷியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களில் 26 பேர் சிரியாவை சேர்ந்தவர்கள் எனவும், 9 பேர் ரஷ்யாவை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சண்டையில் 43 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.