ஜெனீவா
சிரிய அரசு கடந்த ஏப்ரல் மாதத்தில் கான் ஷேக்கோம் எனும் இடத்தில் மக்கள் மீது வீசியதில் 80 பேர் இறந்தனர். இதையடுத்து அமெரிக்க படைகள் சிரிய ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின.
மேலும் ஐநா போர் குற்ற விசாரணை ஒன்றையும் நடத்த உத்தரவிட்டது. இதன் அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஐநா அறிக்கை 33 முறை இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதன் விவரங்களை தொகுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் அரசுப்படைகள் 27 முறை வீசியுள்ளன. ஆறு முறை வீசிய குற்றவாளி யார் என்பதை அறிய முடியவில்லை என்றும் கூறியுள்ளது.
சிரியாவின் அஸாத் அரசு மீண்டும் மீண்டும் சரின் வாயுவை வீசியதை மறுத்து வந்தது. கான் ஷேக்கும்மில் அரசு படைகள் குண்டு வீசியதில் போராளிகள் வைத்திருந்த இராசயன ஆயுதங்கள் வெடித்ததாக் அஸாத் அரசு கூறியிருந்தது.