உலக செய்திகள்

சிரியாவில் ஜெட் விமானங்கள் இன்று தாக்குதல்; பொதுமக்களில் 27 பேர் பலி

சிரியாவில் ஜெட் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்களில் 27 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

டமாஸ்கஸ்,

சிரியாவின் டமாஸ்கஸ் நகர் அருகே சிரிய மற்றும் ரஷ்ய ஜெட் விமானங்கள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன. இதில் ஹமோரியா நகரில் மக்கள் அதிகம் கூடும் சந்தை பகுதி மற்றும் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள் தாக்குதலுக்கு இலக்காகின. இந்த சம்பவத்தில் 17 பேர் பலியாகினர்.

இதேபோன்று அர்பின் நகரில் நடந்த தாக்குதலில் 4 பேரும் மற்றும் மிஸ்ரபா மற்றும் ஹரஸ்தா நகரங்களில் நடந்த தாக்குதலில் 6 பேரும் பலியாகி உள்ளனர்.

இதுபற்றி ஹமோரியா பகுதியில் வசித்து வரும் சாதிக் இப்ராகிம் என்பவர் கூறும்பொழுது, பொதுமக்களே தாக்குதலுக்கு இலக்காகின்றனர். ஒரு ஜெட் விமானம் எங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அது வன்முறையாளர்களையோ அல்லது சோதனை சாவடி பகுதிகள் மீதோ தாக்குதல் நடத்தவில்லை என கூறியுள்ளார்.

இதனை மறுத்துள்ள சிரிய அரசாங்கம் மற்றும் ரஷ்யா, தங்களது ஜெட் விமானங்கள் பொதுமக்கள் மீது குண்டுகளை வீசவில்லை என்றும் தீவிரவாதிகளின் பதுங்கு குழிகளையே தாக்கினோம் என்றும் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது