உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட தைபான் ரக ஹெலிகாப்டர்கள்

ஆஸ்திரேலியாவில் தைபான் ரக ஹெலிகாப்டர்கள் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டன.

தினத்தந்தி

கான்பெரா,

ஆஸ்திரேலியாவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ராணுவ பயிற்சியின்போது எம்.ஆர்.எச்-90 தைபான் ரக ஹெலிகாப்டர்களும் வானில் பறந்து கொண்டிருந்தன. அப்போது குயின்ஸ்லாந்து மாகாண கடற்கரை அருகே 2 ஹெலிகாப்டர்கள் விழுந்து விபத்துக்குள்ளாயின. இதில் 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதேபோல் மார்ச் மாதத்திலும் ஒரு தைபான் ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த இரு சம்பவங்கள் குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் தைபான் ரக ஹெலிகாப்டர் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியானது.

இந்தநிலையில் வீரர்களின் பாதுகாப்பு கருதி எம்.ஆர்.எச்-90 தைபான் ரக ஹெலிகாப்டர்கள் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக யு.எச்-60 என்ற 40 ஹெலிகாப்டர்கள் கடற்படையில் சேர்க்கப்பட இருப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு மந்திரி ரிச்சர்ட் மார்லஸ் கூறினார். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்