உலக செய்திகள்

சார்க் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு

பாகிஸ்தானில் நடக்க உள்ள சார்க் மாநாட்டில் பங்கேற்க வருமாறு, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

இஸ்லாமாபாத்,

சார்க் மாநாட்டில் பங்கேற்க, பாகிஸ்தான் வருமாறு பிரதமர் மோடிக்கு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சார்க் மாநாட்டை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு உறுப்பு நாடு பொறுப்பேற்று நடத்தும். கடைசியாக 2014-ம் ஆண்டு காத்மாண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் மோடி பங்கேற்றார். 2016-ம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாநாடு நடைபெற இருந்தது.

அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 19 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதனால் இந்தியா மாநாட்டில் பங்கேற்க முடியாது என அறிவித்தது. அதேபோல் வங்காளதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் பங்கேற்க மறுத்துவிட்டதால் சார்க் மாநாடு நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறினார்.


சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்