உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு: தலீபான்கள் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு அமைய உள்ளதாக தலீபான்கள் அறிவித்துள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானை தங்கள் வசப்படுத்தியுள்ள தலீபான்கள், அங்கு அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தலீபான்களின் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் காபூலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஆப்கானிஸ்தானில் அமையும் தலீபான்களின் இடைக்கால அரசில் முல்லா முகம்மது ஹசன் அகண்ட் தலைவராகவும், தலீபான் தலைவர் முல்லா பரதர், துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருப்பார்.

வெளியுறவுத் துறை துணை மந்திரியாக ஷேர் முகம்மது அப்பாஸ் ஸ்டானிக்சாயும், உள்துறை மந்திரியாக சிராஜுதீன் ஹக்கானியும் இருப்பார்கள். பாதுகாப்பு மந்திரியாக முல்லா யாக்கூப் பதவி ஏற்பார். அரசை நடத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாக இந்த மந்திரிசபை அமைக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் நடைபெறும் போராட்டங்கள் சட்டவிரோதமானவை. தற்போது ஒரு அரசு அமைக்கப்படும் நிலையில், அதனிடம்தான் மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்