உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதல்; 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாத தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர்.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தானின் உரூஸ்கான் மாகாணத்தில் தரீன்கோட் நகரில் பாதுகாப்பு படையினரை இலக்காக கொண்டு தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்து உள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நீண்ட வருடங்களாக அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்னரும், இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது. இதேபோன்று கண்ணிவெடிகளை வெடிக்க செய்து தாக்குதலில் ஈடுபடுவதும் அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த வியாழ கிழமை கந்தஹார் மாகாணத்தில் பாஞ்ச்வாய் மாவட்டத்தில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில், 3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட 4 பேர் பலியாகினர். இதேபோன்று 4 குழந்தைகள், ஒரு பெண் மற்றும் ஓர் ஆண் என 6 பேர் காயமடைந்தனர்.

கடந்த 9ந்தேதி கந்தஹார் மாகாணத்தில் ஆர்கிஸ்தான் மாவட்டத்தில் சாலையோரம் கண்ணிவெடி ஒன்று வெடிக்க செய்யப்பட்டதில் 8 பேர் உயிரிழந்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது