உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கர துப்பாக்கி சூடு - பாதுகாப்பு படை வீரர்கள் 25 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட பயங்கர துப்பாக்கி சூடு தாக்குதலில், பாதுகாப்பு படை வீரர்கள் 25 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கும், உள்நாட்டு படைகளுக்கும் இடையேயான மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அங்குள்ள கஜினி மாகாணத்தின், காராபாக் மாவட்டத்தில் சோதனைசாவடி ஒன்று செயல்பட்டு வந்தது. அதில் பாதுகாப்பு படையினர் பணியாற்றி வந்தனர்.

இந்தநிலையில், நேற்று அங்கு தலீபான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவின் கீழ் இருந்த உள்ளூர் பாதுகாப்பு படையினர் 7 பேர் சென்று, பணியில் இருந்த படை வீரர்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டு தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 25 பேர் கொல்லப்பட்டனர். இதை கஜினி மாகாண கவுன்சில் தலைவர் நசீர் அகமது பகிரி உறுதிபடுத்தினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை