உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் ராணுவ தளம் மீது தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல்; 18 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பரா மாகாணத்தில் அமைந்த ராணுவ தளம் மீது தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் கொல்லப்பட்டனர். #TalibanAttack

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி பொதுமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஆப்கானிஸ்தான் நாடும் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் பாலா புளுக் மாவட்டத்தில் அமைந்துள்ள அந்நாட்டின் ராணுவ தளம் ஒன்றின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் 18 வீரர்கள் பலியாகியுள்ளனர். 2 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு கூடுதல் வீரர்கள் அனுப்பப்பட்டு உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் ராணுவ தளம் மீது நடந்த தாக்குதலுக்கு தலீபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்