உலக செய்திகள்

பேச்சு வார்த்தையை டிரம்ப் முறித்த நிலையில் அமெரிக்க தூதருடன் தலீபான்கள் சந்திப்பு

பேச்சு வார்த்தையை டிரம்ப் முறித்த நிலையில், அமெரிக்க தூதரை தலீபான்கள் சந்தித்தனர்.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர தலீபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா நேரடி பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இரு தரப்பும் ஒப்பந்தம் ஒன்றை எட்டுகிற நிலையும் உருவானது.

ஆனால் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரை குறி வைத்து தலீபான்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவந்ததால், பேச்சு வார்த்தையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முறித்துக்கொண்டார். இந்த நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க அமைதி தூதர் ஜல்மே கலீல்ஜாத்தை நேற்று முன்தினம் முல்லா அப்துல் கனி பரடர் தலைமையிலான தலீபான் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். இருப்பினும் இப்போதைக்கு அமெரிக்காவும், தலீபான்களும் மீண்டும் பேச்சு வார்த்தையை தொடங்குவதற்கான வாய்ப்பு இல்லை என தகவல்கள் கூறுகின்றன

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை