கோப்புப்படம் 
உலக செய்திகள்

ஆப்கான் பெண்கள் ஐ.நா. அமைப்பில் பணிபுரிய தடை - தலீபான்கள் உத்தரவு

ஆப்கான் பெண்கள் ஐ.நா. அமைப்பில் பணிபுரிய தடை விதித்து தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தினத்தந்தி

காபூல்,

கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு ஐ.நா., மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. ஐ.நா.வின் இந்த அமைப்பில் பெண்களே முக்கிய அங்கம் வகிக்கின்றனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் ஐ.நா. அமைப்பில் பணிபுரிய தலீபான்கள் தடை விதித்துள்ளனர். இதை ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது.

இது குறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐ.நா. அமைப்பில் ஆப்கான் பெண்கள் பணிபுரிய தலீபான்கள் அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அவர்கள் எழுத்துப்பூர்வமாக அறிவிக்காமல், வாய்மொழியாக அறிவித்துள்ளனர். தலீபான்களின் இந்த முடிவை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. பெண் ஊழியர்கள் இல்லாமல் மருத்துவத் துறை சார்ந்த இங்குள்ள உயிர் காக்கும் கருவிகளை இயக்க முடியாது" என கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்