உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படை; நிராகரித்த தலிபான்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெற்றார்.

தினத்தந்தி

காபுல்,

அமெரிக்காவில் 2001ம் ஆண்டு இரட்டை கோபுரம் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாதிகள் ஆப்காஸ்தானில் பதுங்கி இருந்ததால் அந்நாட்டின்மீது அமெரிக்கா படையெடுத்தது. 20 ஆண்டுகள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. பின்னர், 2021ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றார். அவர் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெற்றார்.

இதனிடையே, ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை களமிறக்க டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். குறிப்பாக, சீனாவின் எல்லையில் உள்ள ஆப்கானிஸ்தானின் பஹ்ராம் விமானப்படை தளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். சீனா அருகே இந்த விமானப்படை தளம் இருப்பதால் சீனாவுக்கு பதிலடி கொடுக்க பயன்படும் என்று டிரம்ப் கருதுகிறார். மேலும், பஹ்ராம் விமானப்படை தளத்தை தங்களுக்கு தரும்படி ஆப்கானிஸ்தானை மிரட்டும் வகையில் டிரம்ப் பேசி வருகிறார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை நிறுத்த டிரம்ப்பின் யோசனையை தலிபான்கள் நிராகரித்துள்ளனர். பஹ்ராம் விமானப்படை தளத்தை அமெரிக்க படைகள் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் முஜாகித் தெரிவித்துள்ளார்.  

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு