உலக செய்திகள்

ஆப்கான் அரசியல்வாதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது: தலீபான்கள் தகவல்

ஆப்கான் அரசியல்வாதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது என்று தலீபான்கள் தெரிவித்தனர்.

தினத்தந்தி

மாஸ்கோ,

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து ரஷியா ஏற்பாட்டின்பேரில் மாஸ்கோவில் ஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகள் மற்றும் தலீபான்கள் பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இருந்ததாக தலீபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

மாஸ்கோவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தலீபான் பிரதிநிதிகள் குழு தலைவர் ஷேர் முகம்மது அப்பாஸ் ஸ்டானிக்சைய் கூறுகையில், ஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. பெண்கள் உரிமை, இஸ்லாமிய அரசமைப்பு சட்டம் ஆகியவற்றில் உடன்பாடற்ற கருத்துக்கள் எழுந்த நிலையிலும், பல விவகாரங்களில் வெற்றிகரமாக இருந்தது.

எதிர்காலத்திலும் இது தொடரும் என நம்புகிறேன். தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுத்து சென்று நாங்கள் தீர்வை எட்டுவோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது