கோப்புப்படம் 
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் விமானங்களை இயக்க வேண்டும்: இந்தியாவுக்கு தலீபான்கள் கோரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு தலீபான்கள் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் துவங்கியதும் கடந்த ஆகஸ்ட் 15 தேதி தலீபான்கள் நாட்டை கைப்பற்றினர். காபூல் விமான நிலையத்தை மட்டும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க ராணுவம், ஆகஸ்ட்30-ம் தேதி அங்கிருந்து வெளியேறியது. எனினும், குறைந்த அளவிலான விமானங்களே இயக்கப்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானுக்கான வழக்கமான அனைத்து வர்த்தக விமான சேவைகளையும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குப் பிறகு இந்தியா நிறுத்தி இருந்தது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கக்கோரி, இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) தலீபான் அரசு கடிதம் எழுதியுள்ளது. தற்போது இந்த கடிதம் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு