உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதலில் 19 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலியாயினர்.

தினத்தந்தி

காந்தஹார்,

ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் காந்தஹார் மாகாணத்தின் மாரோப் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகள் கார் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தினர்.

இந்த தாக்குதல்களில் 19 பேர் பலியாகினர். அவர்களில் 8 பேர் காந்தஹார் மாகாண தேர்தல் கமிஷன் உறுப்பினர்கள் ஆவர். 11 பேர் பாதுகாப்பு படையினர் ஆவார்கள். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகளில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

கத்தார் நாட்டின் தலைநகர் டோஹாவில் நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே சமரச பேச்சு தொடங்கிய தருணத்தில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை