கீவ்,
உக்ரைன் மீது ரஷியா 41-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:-
ஏப்ரல் 5, 9.00 PM
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய உக்ரைன் அதிபர்
ஐ.நா. உடனடியாக செயல்பட வேண்டும், அதன் அமைப்பு சீர்திருத்தப்பட வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலில் அனைத்து பிராந்தியங்களுக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். ரஷிய ராணுவம் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
ஏப்ரல் 5, 8.00 PM மனதை உலுக்கும் காட்சி: ஒருவேளை போரில் உயிரிழந்தால்...பெற்றோர்கள் குழந்தையின் முதுகில் எழுதப்படும் குடும்ப விவரங்கள்...
ஏப்ரல் 5, 7.00 PM
புச்சா பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக ரஷியாவில் குறிவைக்கப்பட்டவர்கள் என ஐ.நா கூறியுள்ளது.
'அனைத்து அறிகுறிகளும்' ரஷியப் படைகள் போரில் பங்கேற்காதவர்களை வேண்டுமென்றே கொன்றதைக் குறிக்கிறது என க ஐநா மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.
ஏப்ரல் 5, 6.00 PM
பகை நாடுகளுக்கு உணவு ஏற்றுமதி செய்யும் நாடுகளை ரஷியா தொடர்ந்து கண்காணிக்கும் என ரஷிய அதிபர் புதின் கூறியுள்ளார்.
ஏப்ரல் 5, 5.00 PM
கீவ் மற்றும் செர்னிஹிவ் நகரங்களை சுற்றி இருக்கும் தனது படைகளை குறைப்பதாக ரஷியா அறிவித்தது.
உக்ரைன் தலைநகருக்கு அருகே உள்ள முக்கிய நகரங்களில் இருந்து ரஷிய படை பின்வாங்கின. அங்கிருந்து ரஷிய வீரர்கள் வெளியேறினார்கள்.
இதன் மூலம் கீவ் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் முழுமையாக கைப்பற்றி இருப்பதாக உக்ரைன் நாட்டு துணை பாதுகாப்பு மந்திரி கன்னா மாலியர் தெரிவித்தார்.
இந்தநிலையில், வடக்கு உக்ரைனில் உள்ள செர்னிஹிவ் நகரைச் சுற்றி இருந்து ரஷிய படைகள் புறப்பட்டதால், தலைநகர் கீவ் உடனான அதன் நேரடி சாலை இணைப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என்று பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், மக்கள் இப்போது செர்னிஹிவ் மற்றும் அங்கிருந்து சுதந்திரமாக பயணிக்க முடியும் என்று கூறினார், ஆனால் தப்பி ஓடிய குடிமக்கள் திரும்பி வருவதற்கு நகரத்தில் இது போதுமான அளவு பாதுகாப்பாக இல்லை என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
ஏப்ரல் 5, 4.00 PM
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய உக்ரைன் அதிபர், போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளார். மேலும் புச்சாவில் 300 பேர் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.
சுமி பிராந்தியத்திலும் பொதுமக்கள் டார்ச்சர் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக கவர்னர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 5, 3.00 PM
ரஷியாவிற்கு மேலும் பொருளாதாரத் தடை : இங்கிலாந்து, ஜப்பான் ஒப்புதல்
ரஷியாவிற்கு மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும் என்பதை இங்கிலாந்தும் ஜப்பானும் ஒப்புக் கொண்டுள்ளன.
ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று ஜப்பானிய பிரதிநிதி ஹயாஷி யோஷிமாசாவும் ஒப்புக்கொண்டதாக இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் கூறியுள்ளார்.
மேலும் "ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் மற்றும் அவரது போர் நடத்தை மீது சர்வதேச நாடுகள் அழுத்தத்தை கொடுக்க வேண்டும்" என்று இரு நாட்டு தலைவர்கள் நம்புவதாக அவர் கூறினார்.
ஏப்ரல் 5, 2.00 PM
உக்ரைன் மக்கள் மீண்டு வருவர்- இங்கிலாந்து பிரதமர்
இங்கிலாந்து பிரதமர் பேரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள வீடியேவில்; உக்ரைன் மக்களின் எழுச்சியை புதின் தடுக்க முடியாது. அது பேல் அவரால் உக்ரைனை கைப்பற்றவும் முடியாது. நாங்களும் ஆயுதம் உள்ளிட்ட எங்களால் முடிந்த உதவிகளை வழங்கியுள்ளேம். உக்ரைன் மக்கள் மீண்டு வருவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஏப்ரல் 5, 1.00 PM
உக்ரைன் போரில் 165 குழந்தைகள் பலி
ரஷிய படையெடுப்பு தொடங்கிய பிப்ரவரி 24 ந்தேதியில் இருந்து உக்ரைனில் 165 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக, வழக்கறிஞர்-ஜெனரல் அலுவலகத்தை மேற்கோள் காட்டி இன்டர்பாக்ஸ் உக்ரைன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 266 குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 5, 8.57 am
ஏப்ரல் 05, 05.59 A.M
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உரை..!
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இன்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து மிகவும் வெளிப்படையான விசாரணையை நடத்துவது தொடர்பாக வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக பேசிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, புச்சா நகரில் ரஷியப் படைகளிடமிருந்து உக்ரைன் நகரத்தை திரும்பப் பெற்ற பிறகு, வெகுஜன புதைகுழிகள் மற்றும் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன, குறைந்தது 300 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் போரோடியங்கா மற்றும் பிற நகரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உயர்ந்திருக்கலாம் என்று அவர் கூறினார்.
ஏப்ரல் 05, 05.22 a.m
உக்ரைனுக்கு ஆயுதங்கள், ரஷியாவுக்கு மேலும் பொருளாதாரத் தடைகள் - அடுத்த கட்ட பதிலடியை வெளியிட்ட அமெரிக்கா
மாஸ்கோ மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள், உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் மற்றும் ரஷிய வீரர்களால் கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணை நடைபெற உள்ளது. மேலும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக அமெரிக்கா பல முனைகளில் அழுத்தம் கொடுத்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து ரஷியா பின் வாங்கியபோது, உக்ரேனும் அதன் நட்பு நாடுகளும் பாரிய அட்டூழியங்களுக்கு ஆதாரம் என்று கூறுவதை ரஷியா ஏற்கவில்லை. மேலும் ரஷியா ஏற்கனவே நிலப்பரப்பைக் கட்டுப்படுத்தும் கிழக்குப் பகுதிகளின் மீது கவனம் செலுத்தி, மேலும் போரை விரிவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
ஏப்ரல் 05, 04.12 a.m
புச்சா நகரின் கொலைகளுக்கு போர்க்குற்ற விசாரணை வேண்டும்: ஜோ பைடன் வலியுறுத்தல்
புச்சாவில் நடந்ததாகக் கூறப்படும் அட்டூழியங்கள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் "போர்க்குற்ற விசாரணைக்கு" அழைப்பு விடுத்தார். மேலும் மாஸ்கோவிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் பைடன் உறுதியளித்தார்.
இதனிடையே உக்ரைனின் அதிபர் ஜெலெனஸ்கி, கீவ் அருகே ரஷிய ராணுவம் நடத்திய "இனப்படுகொலையை" ஒப்புக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
ரஷிய ராணுவம் தலைநகருக்கு அருகிலுள்ள பேரழிவிற்குள்ளான நகரத்திலிருந்து பின்வாங்கி, ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்ற 40 நாள் போரின் பயங்கரத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியபோது தெருக்களிலும் வெகுஜன புதைகுழிகளிலும் டஜன் கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மேற்கத்திய தலைவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏப்ரல் 05 03.51 a.m
உக்ரைன் கிராமத்தில் மேயர் உட்பட 4 பேர் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கீவின் மேற்கே ஒரு கிராமத்தில் மேயர், அவரது கணவர் மற்றும் மகன் உட்பட ஐந்து பொதுமக்களின் உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதை உக்ரேனிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேயர் உட்பட நான்கு உடல்கள், மோட்டிஜினில் உள்ள அவரது வீட்டின் எல்லையில் உள்ள பைன் காடுகளில் பாதி புதைக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த ஏ.எப்.பி (AFP) செய்தியாளர்களிடம் போலீசார் காண்பித்தனர். தோட்டத்தில் உள்ள சிறிய கிணற்றில் ஐந்தாவது உடல் கண்டெடுக்கப்பட்டது.
ஏப்ரல் 05 , 03.20 a.m
ரஷியா போர்க்குற்றம் தொடர்பான வழக்கு குறித்து அமெரிக்கா ஆலோசனை - சல்லிவன்
உக்ரைனில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கான விலையை ரஷியாவும் அதிபர் விளாடிமிர் புதின், செலுத்துவதை உறுதி செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்துவார் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்தார்.
ஏப்ரல் 05 , 02.50 a.m
உக்ரைன் போருக்கு மத்தியில் பல்கேரியாவிற்கு 8 F-16 போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்
உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு பிராந்திய அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், அதன் விமானப்படையை வலுப்படுத்தி, 1.67 பில்லியன் டாலர்களுக்கு பல்கேரியாவிற்கு எட்டு F-16 போர் விமானங்களை விற்க அமெரிக்க பாதுகாப்புத் துறை இன்று ஒப்புதல் அளித்தது.
"முன்மொழியப்பட்ட விற்பனையானது தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் பல்கேரியாவின் திறனை மேம்படுத்தும், இதன் மூலம் பல்கேரிய விமானப்படையானது நவீன போர் விமானங்களை கருங்கடல் பகுதியில் வழக்கமாக நிலைநிறுத்த உதவுகிறது" என்று அந்நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 05 2.02 a.m
உக்ரைனின் மைக்கோலைவ் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர் என்றும் மேலும் 46 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நகர மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 05 01.43 a.m
35 ரஷிய தூதர்களை வெளியேற்றும் பிரான்ஸ்: அமைச்சக வட்டாரம் தகவல்
ஏப்ரல் 05 01.14 a.m
ரஷியா மீதான அமெரிக்க பொருளாதாரத் தடைகள் இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 05 , 12.16 a.m
புச்சா நகரில் ஒரு வீட்டின் அடித்தளத்தில் ஐந்து பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.