உலக செய்திகள்

மத்திய கிழக்கில் பதற்றம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்சின் 10 விமானங்கள் ரத்து

பயணிகள் விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையங்கள் அல்லது வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளவும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு

மேற்கு ஆசியாவில் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள ஈரானை. அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் இன்று தாக்கியது. இதில் வான் வழியே போர் ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதனால் நகரத்தின் சில பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், மத்திய கிழக்கு பகுதியின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டு உள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியை நோக்கி செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் 10 விமானங்களை ரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

விமான பயணிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு பாதுகாப்பின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மோதல் தொடர்ச்சியாக, கொழும்புவில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி செல்லும் அனைத்து விமானங்களும் வருகிற மார்ச் 1-ம் தேதி நண்பகல் 12 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்து உள்ளது. உங்கள் புரிதலுக்கு நன்றி. இந்த சூழ்நிலையில் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.

பயணிகள் விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும் என்றும், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளவும் என்றும், தங்கள் பயண முகவர்களை அணுகவும் என்றும் அல்லது புதிய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.