உலக செய்திகள்

ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரம்; 50 பேர் தலையை துண்டித்து படுகொலை-ஐ.எஸ். பயங்கரவாதிகள் அட்டூழியம்

ஆப்பிரிக்க நாட்டில் 50 பேர் தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

மாபுடோ,

தென்ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மொசாம்பிக். இந்த நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள கபோ டெல்போ மாகாணத்தில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஐ.எஸ். பயங்கரவாதிகள் காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அங்கு மத அடிப்படையிலான அரசை நிறுவும் நோக்கில் அரசு படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். அதே சமயம் இவர்கள் அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக கிராமங்களில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களை குறிவைத்து கொடூர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கபோ டெல்போ மாகாணத்தில் உள்ள நஞ்சாக என்கிற கிராமத்துக்குள் சுமார் 100 பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர். அங்கிருந்த வீடுகளுக்கு தீ வைத்து சூறையாடிய பயங்கரவாதிகள் கிராம மக்கள் பலரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.

பின்னர் அவர்களை அங்கு உள்ள ஒரு கால் பந்தாட்ட மைதானத்துக்கு அழைத்து சென்று அனைவரையும் தலைகீழாக தொங்கவிட்டு ஒவ்வொருவரின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். இப்படி 50-க்கும் அதிகமானோரின் தலையை துண்டித்து படுகொலை செய்தனர். பயங்கரவாதிகளின் இந்த மூர்க்கத்தனம் கிராம மக்களை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்