உலக செய்திகள்

பிரான்ஸ்: தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான பை கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு

பிரான்சின் மெட்சு நகரில் உள்ள தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான பை கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

பாரிஸ்,

நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடத்தில் காட்டி, பேச்சு, கருத்து சுதந்திரம் பற்றி வகுப்பறையில் விவாதத்தை நடத்திய பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அன்றே போலீஸாரால் கொல்லப்பட்டார். அவர் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டது. மேலும், இந்தக் கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் என்று திங்கட்கிழமை கடுமையாகத் தாக்கிப் பேசினார். இந்த நிலையில் மேக்ரோன் மற்றும் பிரான்ஸ் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் பல இஸ்லாமிய நாடுகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இச்சூழலில் பிரான்ஸில் உள்ள நைஸ் தேவலாயத்தில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் பரபரப்பு அடங்குவதற்குள்ளாக பிரான்சின் மெட்சு நகரில் உள்ள தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குறிப்பிட்ட இடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்