உலக செய்திகள்

ஈராக்கில் பயங்கரம்: மசூதியில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் பலி

ஈராக்கில் மசூதி ஒன்றில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் பலியாகினர்.

டமாஸ்கஸ்,

ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள பாலதியத் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில் நேற்று காலை குண்டு வெடித்தது. இதில் 10 பேர் பலியானார்கள். 30 பேர் காயம் அடைந்தனர்.

பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டு பெல்ட் அணிந்துவந்து வெடிக்கச் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்ததும் பாதுகாப்பு படையினர் அந்த இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

SCROLL FOR NEXT