உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் - பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

காபுல்,

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும், அரசுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைகள் தாகாவில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் சில இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களும் நிகழ்கின்றன.

இந்நிலையில், வடகிழக்கு நகரமான குந்தூஸ் நகரில் குடியிருப்பு பகுதிகள் மீது பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளனர். டலோகா பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோர்ட்டார் ரக குண்டுகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

வன்முறையின் உச்சமான இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என ஆப்கானிஸ்தான் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து தலிபான் இயக்கம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்