உலக செய்திகள்

சிரியாவில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாத தாக்குதல்; 3 வீரர்கள் பலி

சிரியாவில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

டமாஸ்கஸ்,

சிரியாவில் டெய்ர் எஜ்-ஜோர் மற்றும் பல்மைரா நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்து உள்ளது. அதில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர்.

இந்நிலையில், அட்-டான்ப் பகுதியில் இருந்து வந்த பயங்கரவாத குழு ஒன்று பேருந்தீன் மீது தாக்குதல் நடத்தியது. அல்-ஷோலா பகுதியில் நடந்த இந்த தாக்குதலில், 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 30ந்தேதி, இதே பகுதியில் பேருந்து ஒன்றின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 28 பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் காயமடைந்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு