பயிற்சியாளருடன் சுற்றுலா சென்றபோது தாய்லாந்து தாம் லூங் குகையில் சிக்கிய சிறுவர்கள் 17 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டனர்.
தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினர்.
இந்த சிறுவர்கள் எல்லோரும் இப்போதும் நல்ல உடல்நிலையில் இருக்கிறார்கள். நிமோனியா காய்ச்சலில் இருந்த இரண்டு சிறுவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள். அதேபோல் முதலில் வெளியேறிய வீரர்கள் எல்லோரும் வீட்டிற்கு திரும்பும் நிலைக்கும் தயாராகி உள்ளனர். பயிற்சியாளரும் நல்ல உடல்நிலையில் இருக்கிறார்.
இந்த நிலையில் இவர்கள் எல்லோரும் முதல்முறையாக, தொலைக்காட்சி முன்னிலையில் தோன்றி இருக்கிறார்கள். இன்று மாலை நடந்த நிகழ்ச்சியில் அவர்கள் தோன்றி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ''தாய்லாந்து மூவ்ஸ் பார்வர்ட்'' என்று ''முன்னோக்கி செல்லும் தாய்லாந்து'' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பயம்முறுத்தும் வகையில் கேள்வி கேட்க கூடாது என்று கூறப்பட்டு இருந்தது. சிறுவர்கள் எல்லோரும், பள்ளி கால்பந்து அணி உடையில் நிகழ்ச்சிக்கு வந்து இருந்தனர். அதேபோல், கால்பந்து அணியின் பயிற்சியாளரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார், மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.