உலக செய்திகள்

"பிரதமர் மோடியின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி" இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

புதிய பொறுப்பில் பயணத்தை தொடங்கும் போது பிரதமர் மோடியின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி என கூறியுள்ளார்.

தினத்தந்தி

லண்டன்,

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்று இருப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தமது டிவிட்டர் பதிவில், இங்கிலாந்து பிரதமர் ரிஷிப் சுனக்குடன் பேசியதில் மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார்.

இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் இரு நாடுகளின் கூட்டாண்மையை வலுப்படுத்த ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என பிரதமர் மேடி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பிரதமர் மேடியின் பதிவுக்கு, இங்கிலாந்து பிரதமர் ரிஷிப் சுனக் பதில் அளித்துள்ளார். அவர் தமது பதிவில், புதிய பொறுப்பில் பயணத்தை தொடங்கும் போது பிரதமர் மேடியின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி என கூறியுள்ளார்.

மேலும், அடுத்த வர உள்ள மாதங்களில் அல்லது ஆண்டுகளில், இரு பெரிய ஜனநாயக நாடுகளான இங்கிலாந்தும் இந்தியாவும் எதை இலக்காக அடையலாம் என எதிர்ப்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்