உலக செய்திகள்

அமெரிக்காவில் பொறுப்பு ராணுவ மந்திரி நியமனம்

உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் அங்கு தாக்குதல் நடத்தி வந்தன.

தினத்தந்தி

வாஷிங்டன்,

ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு வீழ்த்தப்பட்டு விட்டதாகவும், எனவே அமெரிக்க படைகளை திரும்பப்பெறுவதாகவும் ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ், தான் பதவி விலகுவதாக கூறி, டிரம்பிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இந்த நிலையில், துணை ராணுவ மந்திரி பேட்ரிக் சனாகானை பொறுப்பு ராணுவ மந்திரியாக நியமித்து, அவர் ஜனவரி 1ந் தேதி முதல் பணியை தொடங்குவார் என டிரம்ப் நேற்று அறிவித்தார்.

இது பற்றி டிரம்ப் தனது டுவிட்டரில் மிக திறமை வாய்ந்த துணை ராணுவ மந்திரியை, ராணுவ மந்திரி (பொறுப்பு) ஆக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது