Image Courtesy: AFP 
உலக செய்திகள்

இலங்கையில் ‘பிம்ஸ்டெக்’ உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது

இலங்கையில் ‘பிம்ஸ்டெக்’ உச்சி மாநாடு இன்று தொடங்க உள்ளது.

தினத்தந்தி

கொழும்பு,

தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், தாய்லாந்து ஆகிய 7 நாடுகள் இடம்பெற்ற பிம்ஸ்டெக் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்புக்காக பாடுபட்டு வருகிறது.

பிம்ஸ்டெக் 5-வது உச்சி மாநாட்டை இலங்கை நடத்துகிறது. இலங்கையில் இன்று முதல் 30-ந் தேதிவரை நடக்கிறது. நேரடியாகவும், காணொலி காட்சி மூலமாகவும் மாநாடு நடக்கிறது.

இந்தியா, வங்காளதேசம், பூடான், நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகளும், உயர் அதிகாரிகளும் நேரடியாக பங்கேற்கிறார்கள். மியான்மர் வெளியுறவு மந்திரி காணொலி காட்சியில் பங்கேற்று பேசுகிறார்.

30-ந் தேதி, அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையில் நடக்கும் அமர்வில், இதர நாடுகளின் தலைவர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்கள். அமைப்பின் எதிர்காலம் குறித்து விவாதிக்கிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து