உலக செய்திகள்

இலங்கையின் தற்போதைய நிலைக்கு அதிபரின் அதிகார குறைப்பு நடவடிக்கையே காரணம் - சிறிசேனா குற்றச்சாட்டு

இலங்கையின் தற்போதைய நிலைக்கு, அதிபரின் அதிகார குறைப்பு நடவடிக்கையே காரணம் என சிறிசேனா குற்றம் சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கை அதிபராக சிறிசேனா 2015-ம் ஆண்டு பதவி ஏற்றார். அதன்பிறகு, அரசியல் சட்டத்தில் 19-வது திருத்தத்தை கொண்டு வந்தார். அதன்படி, அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. கடந்த ஆண்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுடனான மோதலால், அவரை நீக்கி விட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் சிறிசேனா நியமித்தார். இதனால், இரண்டு மாதங்களாக குழப்பநிலை நிலவியது.

இந்நிலையில், கொழும்பு நகரில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அதிபர் சிறிசேனா பேசியதாவது:-

இந்த அரசின் மிகப்பெரிய தவறு, 19-வது திருத்தம். அது, ஸ்திரமற்ற தன்மையை உண்டாக்கி விட்டது. நாம் ஸ்திரமற்ற அரசை நடத்தி வருவதாகவும், நானும், பிரதமரும் ஆளுக்கொரு பக்கம் அரசை இழுத்து வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதற்கு காரணம் 19-வது திருத்தம்தான். இவ்வாறு அவர் பேசினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்