உலக செய்திகள்

இங்கிலாந்தில் கொரோனோ தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்தது

இங்கிலாந்தில் கொரோனோ தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 39 ஆயிரத்தை கடந்துள்ளது.

லண்டன்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 63,21,341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3,75,652 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் அமெரிக்காவை மிகவும் பாதித்துள்ள இந்த வைரஸ் மற்றொரு வல்லரசு நாடான இங்கிலாந்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 556 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 39,045 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 44 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 2,76,332 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 1,28,437 பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை