ரியோ டி ஜெனிரோ,
பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் கடந்த 24 மணி நேரத்தில் 90,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,22,27,179 ஆக உயர்ந்துள்ளது.
பிரேசிலில் கொரோனா வைரசால் மேலும் 2,244 பேர் பலியான நிலையில், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,01,087 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,06,89,646 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 12,36,446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே கொரோனா பாதிப்புகள் தொடர்பாக, சுகாதாரத் துறைக்கு புதிய மந்திரியாக நியமிக்கப்பட்ட மார்செலோ குயிரோகா கூறுகையில், ஒருநாளில் 10 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.