உலக செய்திகள்

லிபியாவில் பயங்கரவாதிகள் நடத்திய ஆளில்லா விமான தாக்குதல்: கிழக்கு பிராந்திய படையினர் 3 பேர் பலி

லிபியாவில் பயங்கரவாதிகள் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் லிபிய கிழக்கு பிராந்திய படையினர் 3 பேர் பலியாகினர்.

தினத்தந்தி


* லிபியாவில் டார்ஹுனா நகரில் பயங்கரவாதிகள் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் லிபிய கிழக்கு பிராந்திய படையினர் 3 பேர் பலியாகினர்.

* ரஷியாவில் யாரோஸ்லாவி பிராந்தியத்தில் பஸ்சும், லாரியும் மோதி நேரிட்ட விபத்தில் 9 பலியாகினர். 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

* சீனாவின் கிழக்கு பகுதியில் நடந்த எல்லை தாண்டிய தொலை தொடர்பு மோசடியில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* ஸ்பெயின் நாட்டில் பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு மழை, வெள்ளத்துக்கு 5 பேர் பலியாகினர்.

* வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை, கினியா அதிபர் ஆல்பா கோண்டே சந்தித்து இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்தினார்.

* ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக நான் பொது வாக்கெடுப்பு நடத்தியதை சிலர் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் கூறி உள்ளார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு