உலக செய்திகள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை கடந்தது

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா பாதிப்பு தற்போது 6 லட்சத்தை கடந்துள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. அங்கு வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதே போல் கொரோனா பலி எண்ணிக்கை இன்னும் சில தினங்களில் 2 லட்சத்தை எட்டும் நிலை உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளை அதிகம் கொண்ட முதல் மாகாணமான கலிபோர்னியாவில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்து விட்டது.

அங்கு நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 934 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 1,075 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 10 ஆயிரத்து 996 ஆக உள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் 1 கோடி மக்கள் தொகையை கொண்ட லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு மட்டுமே இதுவரை 2 லட்சத்து 18 ஆயிரத்து 693 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 214 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு