வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதல் முறையாக கடந்த 24-ந்தேதி இந்தியா வந்தார். அன்று ஆமதாபாத்தில் நமஸ்தே டிரம்ப் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், பின்னர் ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றிப்பார்த்தார்.
மறுநாள் டெல்லியில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரை சந்தித்து பேசினார். அன்று ஜனாதிபதி மாளிகையில் இரவு விருந்தை முடித்துக்கொண்டு அவர் அமெரிக்கா புறப்பட்டார்.
அங்கு சென்று சேர்ந்தபின், இந்திய பயணம் குறித்து தனது டுவிட்டர் தளத்தில் சில கருத்துகளை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறும்போது, இந்தியா சிறப்பாக இருந்தது. இந்திய பயணம் மிகப்பெரும் வெற்றிகரமாக அமைந்தது என்று குறிப்பிட்டு உள்ளார்.