பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாசெங்கோவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த பத்திரிகையாளர் ரோமன் புரோடாசெவிச் விமானத்தில் பயணிக்கும் தகவலறிந்த பெலாரஸ் அரசு, அவரை கைது செய்யத்தான் இப்படி ஒரு பகீர் சம்பவம் அரங்கேற்றியது. பெலாரஸ் நாட்டின் இந்த செயலுக்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், பெலாரஸ் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் பற்றி 27 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பு நேற்று அவசர ஆலோசனை நடத்தியது.இந்த கூட்டத்தின் முடிவில், பத்திரிகையாளர் கைது
விவகாரம் மற்றும் விமானம் வழிமறிக்கப்பட்டு, தரையிறங்க செய்தது ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மேலும் இந்த விவகாரத்தில் பெலாரஸ் நாடு மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல் அளித்து உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, ஐரோப்பிய கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் வான்வழியே பெலாரஸ் நாட்டு விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐரோப்பிய கூட்டமைப்பின் 27 நாடுகளில் இருந்து பெலாரஸ் நாட்டுக்கு விமானங்கள் இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.