உலக செய்திகள்

தாயை மிரட்டிய சிங்க குட்டி...!! வைரலாகும் வீடியோ

சிங்க குட்டி ஒன்று தனது தாயை பின்னால் இருந்து மிரட்டிய வீடியோ 18 லட்சம் பார்வையாளர்களுடன் வைரலாகி வருகிறது.

லண்டன்,

வனவிலங்குகள், எப்போது ஆபத்து வரும் என தெரியாமல் அதிக எச்சரிக்கையுடனேயே காணப்படும். விலங்குகளில் வேட்டையாடும் தன்மை கொண்ட சிங்கம் ஒன்று துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது.

ஆனால், அந்த சிங்கமே அச்சப்படும் வகையிலான வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பெண் சிங்கம் ஒன்று தரையில் படுத்தபடி ஓய்வு எடுத்து கொண்டிருக்கிறது. இரண்டு சிங்க குட்டிகள் அதனை சுற்றி உள்ளன. ஒரு சிங்க குட்டி முன்னால் இருந்து தாயை நோக்கி முன்னேறுகிறது.

ஆனால், பெண் சிங்கத்தின் பின்னால் இருந்த சிங்க குட்டி மெல்ல, பதுங்கியபடி முன்னேறி செல்கிறது. ஒரு கட்டத்தில் முன்னே இருந்த சிங்க குட்டி ஓடி தாயை நெருங்கும் சமயத்தில், பின்னால் இருந்த சிங்க குட்டி தாயின் மீது பாய்ந்து அதனை மிரட்ட முயற்சிக்கிறது.

இதனால், திடுக்கிட்ட பெண் சிங்கம் உடனடியாக எழுந்து சுற்றி பார்க்கிறது. பின்னர், தனது குட்டி என்று தெரிந்ததும் அமைதியாகி விடுகிறது. தாய் சிங்கம் திரும்பியதும், பயத்தில் சிங்க குட்டி பதுங்குகிறது.

இந்த வீடியோவை 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளனர். பல விமர்சனங்களும் பகிரப்பட்டு உள்ளன.

அதில் ஒருவர், குழந்தைகள் எப்போதும் குழந்தைகளே. அது, எந்த இனம் என்றாலும்... என தெரிவித்து உள்ளார். இதேபோன்று மற்றொருவர், நமது குழந்தைகள் கூட இதுபோன்று பயமுறுத்தும்போது, இதே எதிர்வினையையே நாம் ஆற்றுவோம். கோபம் கொப்பளிக்கும்.

அதன் பின்னர் அதனை ஏற்று கொள்வோம் என தெரிவித்து உள்ளார். இன்னொருவர், தாய் சிங்கம் தன்னை யாரும் பார்த்து விட்டார்களா? என சுற்றும் முற்றும் பார்ப்பது அழகு என தெரிவித்து உள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்