உலக செய்திகள்

சிரியாவில் இருந்து அமெரிக்க படை வீரர்களை திரும்ப பெறும் நடவடிக்கை தொடரும் - அமெரிக்க ராணுவம்

சிரியாவில் இருந்து அமெரிக்க படை வீரர்களை திரும்ப பெறும் நடவடிக்கை தொடரும் என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.


* சிரியாவில் இருந்து அமெரிக்க படை வீரர்களை திரும்ப பெறும் நடவடிக்கை தொடரும் என்றும், 1,000 எண்ணிக்கைக்கு கீழாகவே அமெரிக்க படைகள் சிரியாவில் இருப்பார்கள் என்றும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

* அமெரிக்கா-சீனா இடையிலான முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவுக்கு வரும்படி சீன அதிபர் ஜின்பிங்குக்கு ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுப்பார் என வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

* ஸ்பெயின் நாட்டில் தனிநாடு கோரி போராடி வரும் கேட்டலேனியா பிரிவினைவாதிகள், அந்த நாட்டின் அரசர் பெலிப் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* காலநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறவுள்ளது. இது தொடர்பான தங்கள் நோக்கத்தை விளக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையை ஐ.நா.விடம் அமெரிக்கா அளித்தது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்குள் பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா முழுமையாக வெளியேறும்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு