வாஷிங்டன்,
கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல்கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கி உள்ளது
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்பபடி 4 கோடியே 98 லட்சத்து 53 ஆயிரத்து 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 3,53,97,381 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
உலக முழுவதும் இதுவரை 12,51,701 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தொற்று பாதித்தவர்களில் 1,32,04,050 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,28,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,00.69,586 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2 லட்சத்து 42,330 பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து 63,92,330 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 34,34,926 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.