கோப்புப்படம் 
உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 கோடியே 96 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 11.87 கோடியாக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கூட, கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்புக் காட்டி வருகின்றன.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 13,96,65,916 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 11,87,52,504 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 29 லட்சத்து 98 ஆயிரத்து 843 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,79,14,569 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,06,703 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 3,22,24,139, உயிரிழப்பு - 5,78,993, குணமடைந்தோர் - 2,47,70,980

இந்தியா - பாதிப்பு- 1,42,87,740, உயிரிழப்பு - 1,74,335, குணமடைந்தோர் - 1,25,43,978

பிரேசில் - பாதிப்பு- 1,37,58,093, உயிரிழப்பு - 3,65,954, குணமடைந்தோர் - 1,22,36,295

பிரான்ஸ் - பாதிப்பு - 51,87,879, உயிரிழப்பு - 1,00,073, குணமடைந்தோர் - 40,08,331

ரஷ்யா - பாதிப்பு - 46,75,153, உயிரிழப்பு - 1,04,398, குணமடைந்தோர் - 43,01,448

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

இங்கிலாந்து - 43,80,976

துருக்கி - 40,86,957

இத்தாலி - 38,26,156

ஸ்பெயின் - 33,96,685

ஜெர்மனி - 30,95,016

போலந்து - 26,42,242

அர்ஜெண்டினா- 26,29,156

கொலம்பியா - 26,02,719

மெக்சிக்கோ - 22,91,246

ஈரான் - 21,68,872

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்