உலக செய்திகள்

இங்கிலாந்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,90,584 ஆக உயர்வு

இங்கிலாந்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,90,584 ஆக உயர்ந்துள்ளது.

லண்டன்,

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்தில் இன்று புதிதாக 3,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,90,584 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 288 பேர் உயிரிழந்ததால், தற்போது அங்கு பலியானவர்வர்கள் எண்ணிக்கை 28,734 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 36 லட்சத்தைத் கடந்துள்ளது. மேலும் 11.7 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 2,50,155 ஆக உயர்ந்துள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு