உலக செய்திகள்

சுவிட்சர்லாந்து ஜனாதிபதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சுவிட்சர்லாந்து ஜனாதிபதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

ஜெனீவா,

சுவிட்சர்லாந்து ஜனாதிபதி மற்றும் வெளியுறவு மந்திரி இக்னேசியோ கேஸ்சிஸ், இன்றும் (வெள்ளி கிழமை), நாளையும் (சனி கிழமை) நடைபெற உள்ள முனீச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வது என திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. எனினும், பரிசோதனை முடிவு தெரிந்ததும் இக்னேசியோ தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

வருகிற ஞாயிற்று கிழமை வரை வீட்டில் இருந்தபடியே பணிகளை அவர் தொடர்வார் என அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. இதேபோன்று முனீச் பாதுகாப்பு மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது