உலக செய்திகள்

பொதுமக்கள் பார்வைக்காக முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்ட இங்கிலாந்து ராணியின் நகைகள்

பக்கிங்காம் அரண்மனையில் நடைபெறும் கண்காட்சியில் முதல் முறையாக பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த ஏப்ரல் மாதம் தனது 96-வது பிறந்தநாளை கொண்டாடினார். கடந்த 1952 பிப்ரவரி 6-ந் தேதி, தனது 25-வது வயதில் இங்கிலாந்தின் ராணியாக அரியணையில் ஏறிய அவர், தற்போது வரை ஆட்சியில் நீடித்து வருகிறார். இதன் மூலம் இங்கிலாந்தின் அரச குடும்ப வரலாற்றில், 70 ஆண்டுகளாக மக்கள் பணியில் நீடித்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதனை கொண்டாடும் விதமாக இங்கிலாந்து அரச குடும்பத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற நிகழ்ச்சிகளும், கலாச்சார, பாரம்பரிய நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இங்கிலாந்தின் பக்கிங்காம் அரண்மனையில், வரலாற்று சிறப்புமிக்க புகைப்படங்களும், ஆவணங்களும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

விருந்தினர்கள் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் பக்கிங்காம் அரண்மனையில், முதல் முறையாக பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் இங்கிலாந்து ராணியின் அரிய புகைப்படங்கள் மற்றும் ராணியின் நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி