உலக செய்திகள்

பாகிஸ்தானில் கொரோனா வைரசுக்கான இரண்டாவது அலை தொடங்கி விட்டது; அரசு அறிவிப்பு

பாகிஸ்தானில் கொரோனா வைரசுக்கான இரண்டாவது அலை தொடங்கி விட்டது என அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டில் கொரோனா வைரசின் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை அந்நாட்டில் 3.29 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 6,745 பேர் உயிரிழந்து உள்ளனர்.

3.11 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா பாதிப்புக்கான இரண்டாவது அலை தொடங்கி விட்டது என அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.

இதுபற்றி பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு சுகாதார உதவியாளர் பைசல் சுல்தான் கூறும்பொழுது, ஒரு சில வாரங்களுக்கு முன் நாட்டில் நாளொன்றுக்கு 400 முதல் 500 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டன.

ஆனால், இந்த எண்ணிக்கையானது நாளொன்றுக்கு 700 முதல் 750 பேர் வரை உயர்ந்து உள்ளது. நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் விகிதம் அதிகரித்து உள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் நாட்டில் 2.5 முதல் 2.75 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு