உலக செய்திகள்

சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று பரவல்; 1,401 பேருக்கு பாதிப்பு

சீனாவில் விலங்கு தடுப்பு மருந்து ஆலையில் ஏற்பட்ட கசிவால் 1,401 பேருக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு உள்ளது.

தினத்தந்தி

பீஜிங்,

சீனாவின் பீஜிங் நகரில் லான்சவ் நகரில் விலங்குகளுக்கு தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த ஆலையில் புரூசெல்லா என்ற மருந்து தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில், கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களுக்கு இடையில் காலாவதியான, தொற்று நீக்கி மருந்துகளை அந்த ஆலை பயன்படுத்தி உள்ளது.

ஆனால், அவற்றை ஆலையானது முற்றிலும் அழிக்காமல் விட்டு விட்டது. இந்நிலையில் ஆலையில் இருந்து கெட்டு போன வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது. இது காற்றில் பரவியுள்ளது. அதில் பாக்டீரியாக்களும் இருந்துள்ளன.

இதனால் கடந்த ஆண்டு டிசம்பரில் அருகில் இருந்த கால்நடை ஆராய்ச்சி மையத்தில் இருந்த 200 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 20க்கும் மேற்பட்டோர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆவர்.

இந்நிலையில், 1,401 பேருக்கு பாக்டீரியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை அந்த பாக்டீரியாவுடன் 3 ஆயிரத்து 245 பேர் தொடர்பில் இருந்துள்ளனர். இவர்களில் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று பரவியதற்கான சான்றுகள் இல்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த தொற்றால், காய்ச்சல், மூட்டு வலி மற்றும் தலைவலி ஆகியவை ஏற்படும். மயக்கம், இருதய பாதிப்பு உள்ளிட்டவையும் ஏற்பட கூடும். இதுபற்றி அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறும்பொழுது, இவற்றில் சில அறிகுறிகள் மீண்டும் தோன்ற கூடும். அல்லது ஒருபோதும் பாதிப்பு நீங்காமல் இருக்கும் நிலையை ஏற்படுத்தும் என தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை