டமாஸ்கஸ்,
சிரியா நாட்டின் அதிபர் பஷர் அல் ஆசாத்(வயது 55) மற்றும் அவரது மனைவி அஸ்மா ஆகிய இருவருக்கும் கடந்த மார்ச் 8 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் கொரோனா பாதிப்பிற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் தொற்று ஏற்பட்டு 3 வாரங்களுக்கு பின்னர், தற்போது சிரிய அதிபரும் அவரது மனைவியும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதுமாக குணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் தங்கள் அன்றாட பணிகளுக்கு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.