முந்தைய காலத்தில் இது இங்கிலாந்து ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தது. இந்நாட்டைப் பார்வையிட்ட முதல் ஐரோப்பிய பயணி, இதை இனிமையான நாடு என்று வர்ணித்தார். அப்படித்தான் நவ்ரு அழைக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்நாடெங்கும் துயர்மிகு கதைகளே நிறைந்திருக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சட்டவிரோதமாக நுழைய முயலும் அகதிகள், நவ்ருவில் ஆஸ்திரேலிய அரசால் நடத்தப்படும் தடுப்புக் காவல் முகாம்களில்தான் அடைக்கப்படுகிறார்கள்.
பசிபிக் பெருங்கடலில் வடகிழக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து 3 ஆயிரம் கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இத்தீவு நாட்டின் மக்கள்தொகை பத்தாயிரம் தான்.
ஆஸ்திரேலிய அரசின் தடுப்புக் காவல் முகாம்கள்தான் இந்தக் குட்டி நாட்டுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. வருவாய் வழியாகவும் இருக்கின்றன.
நவ்ருவில் உள்ள பாஸ்பேட் சுரங்கங்கள் மற்றொரு வருவாய் ஆதாரமாக உள்ளன. ஆனால் இன்னும் முப்பது ஆண்டுகளில் அதுவும் தீர்ந்து போய்விடும் என கணிக்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற நாடுகளின் உதவியைத்தான் நவ்ரு நம்பி இருக்கிறது.
இந்நிலையில், இந்த நாட்டில் உள்ள தடுப்பு முகாம்களில் அகதிகள் சந்தித்துவரும் பிரச்சினை சர்வதேச அளவில் விவாதப் பொருளாகி உள்ளது.
இங்கு தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர்களுக்குக்கூட தற்கொலை எண்ணம் அதிகமாக எழுவதாகக் கூறுகிறார்கள் இந்த முகாம்களில் உள்ளவர்களும், உளவியலாளர்களும்.
இந்த முகாமில் உள்ளவர்களுடன் செயல்பட்டுவரும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை பேராசிரியர் நடாஷா பிளச்சர், இந்த முகாம்களில் உள்ள எட்டு வயது, பத்து வயது சிறுவர் களிடம்கூட தற்கொலை நடத் தையைப் பார்க்கிறோம் என்கிறார்.
இந்த மக்களின் நலனுக் காக ஆஸ்திரேலி யாவில் மக்கள் போராடி வருகின்றனர், உரத்துக் குரல் எழுப்பி வருகின்றனர்.
நடாஷா மட்டுமல்ல, முகாம்களில் உள்ள மக்களைக் கவனித்துவரும் பலரும் இதையே சொல்கி றார்கள். அவர்களின் வாழ் க்கை முற்றிலும் சிதைந்து இருக்கிறது. இந்த முகாம்களில் இருந்த பலர் இறந்துவிட்டனர். தற்போது இங்குள்ளவர்களின் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்பதை நினைத்தாலே அச்சமாக உள்ளது என்கின்றனர்.