உலக செய்திகள்

அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள்

அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தற்பொது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதிபரை தேர்வு செய்ய அமெரிக்காவில் மெத்தம் உள்ள 50 மாநிலங்களில் 538 தேர்வாளர்கள் (பிரதிநிதிகள்) உள்ளனர். இவர்களில் 270 பேரின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அமெரிக்க அதிபராக தேர்வாக முடியும்.

தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜே பைடன் 236 வாக்குகளும், குடியரசு கட்சி வேடபாளர் டிரம்ப் 213 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஜோ பைடன் முன்னிலை பெற்றிருந்தாலும், இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைந்த அளவிலேயே உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதில் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் மாகாணங்களில் இழுபறி நிலவுகிறது. இதன்படி மொத்தம் 7 மாகாணங்களில் முடிவுகள் இழுபறியில் உள்ளன. இழுபறியில் உள்ள அரிசோனா, நெவாடா ஆகிய 2 மாகாணங்களில் பைடன் முன்னிலை பெற்றுள்ளார். மேலும் இழுபறியில் உள்ள ஜார்ஜியா, மிச்சிகன், வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் ஆகிய 5 மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்