ஜெனீவா,
உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ராஸ் அதானம் வெளியிட்டுள்ள செய்தியில், நடப்பு ஆண்டு இறுதிக்குள் ஒவ்வொரு நாட்டிலும் 40 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
இதேபோன்று, வருகிற 2022ம் ஆண்டு மத்தியில் 70 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
இந்த இலக்குகளை எட்டுவதற்கு 1,100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தேவைப்படும் என்றும் கூறியுள்ளார். உலக அளவில் மாதம் ஒன்றுக்கு 150 கோடி தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால், நம்முடைய இலக்குகளை அடைவதற்கு தேவையான வினியோகம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.