உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியால் ஆபத்து இல்லை: இங்கிலாந்து ராணி எலிசபெத்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் எந்த ஆபத்தும் இல்லை ஏற்படாது என்று பிரிட்டன் ராணி எலிசெபத் தெரிவித்துள்ளார்

லண்டன்:

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது கணவர் 94 வயதான இளவரசர் பிலிப்புடன் சென்று கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இவரது மூத்த மகனும் வாரிசுமான இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமிலா ஆகியோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தற்போது இங்கிலாந்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்து இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன். அதனால் எனக்கு சிறிய பிரச்சினை கூட ஏற்படவில்லை. தடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் எளிது என்று அதைப் போட்டுக் கொண்டவர்களிடம் இருந்து ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன.

தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் நிச்சயம் பாதுகாப்பு பெறுவார்கள். தடுப்பூசி போடவில்லை என்றால் அந்த பாதுகாப்பை பெற முடியாது. எனவே மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம். தடுப்பூசி போட்டுக் கொண்டால் பாதுகாக்கப்பட்ட உணர்வு ஏற்படும். தடுப்பூசி போடும் திட்டத்தை நான் முழுமையாக வரவேற்கிறேன் என்றார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...