உலக செய்திகள்

'அடிடாஸ்' போலவே பட்டைகளை தயாரித்த 'தாம் ப்ரவுன்' - அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அடிடாஸ் நிறுவனம், போட்டி நிறுவனமான தாம் ப்ரவுனிடம் ஒரு வழக்கில் தோல்வியைத் தழுவியுள்ளது.

நியூயார்க்,

தாம் ப்ரவுன் நிறுவனம் பேஷன் பிரண்ட்களால் வடிவமைக்கப்பட்ட பல்வேறு விர்ச்சுவம் உடைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், அடிடாஸ் நிறுவனம் கடந்த 2021ல் நியூயார்க் ஆடை வடிவமைப்பு நிறுவனமான தாம் ப்ரவுனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது.

அதன்படி, தாம் ப்ரவுன் தயாரிப்புகளில் உள்ள 4 பட்டைகள், அடி டாஸ் தயாரிப்புகளில் உள்ள 3 பட்டைகளுடன் ஒத்துப் போவதால் நுகர்வோரிடையே இது குழப்பத்தை ஏற்படுத்துவதாக எதிர் நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கோரப்பட்டது.

இந்நிலையில், மாறுபட்ட எண்ணிக்கையிலேயே பட்டைகள் இருப்பதால் அமெரிக்க நீதிமன்றம் தாம் ப்ரவுனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் காலணிகள், ஆடை வடிவமைப்பு பன்னாட்டு நிறுவனமான அடிடாஸ், போட்டி நிறுவனமான தாம் ப்ரவுனிடம் ஒரு வழக்கில் தோல்வியைத் தழுவியுள்ளது.