உலக செய்திகள்

உணவுக்காக 4 கிலோமீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

தொண்டு நிறுவனம் உணவு வழங்கியபோது, நான்கு கிலோமீட்டர் தூரத்துக்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தினத்தந்தி

பிரிடோரியா

கொரோனா ஊரடங்கால் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் சூழலில், தென்னாப்பிரிக்காவில் உணவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 103 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென்னாப்பிரிக்காவின் பிரிடோரியா நகரத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஜிம்பாப்வே உள்ளிட்ட நகரத்தில் இருந்து வந்து, சட்டவிரோதமாக குடியேறிய ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்களுக்கு அரசு உதவ முன்வராததால், தொண்டு நிறுவனங்கள் உணவுகள் வழங்கி வருகின்றன.

அப்படி ஒரு தொண்டு நிறுவனம் உணவு வழங்கியபோது, நான்கு கிலோமீட்டர் தூரத்துக்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்